Sona Ilanna Loovamma
Song Lyrics

சோனா....ஆங்...இல்லன்னா..என்னது
லூவம்மா...அப்படின்னா....
சோனா இல்லன்னா லூவம்மா கொஞ்சம்
அட...என்னது சொல்லு ஓஹோ..

காதல் கல்யாணம் நல்லதா அல்லது
கல்யாணத்துக்கு பின் காதலா
கொஞ்சம் சோனா இல்லன்னா லூவம்மா

காதல் புரிந்த பின் கல்யாணம் செய்வது
கண்யமான முறை தானய்யா
பெண்கள் கண் கலங்கும் நிலை போமய்யா

காதல் கல்யாணம் சரியென்றால் உலகில்
கண்ணுக்கழகில்லாத பெண்கள் கதியென்னாகும்
சோனா இல்லன்னா லூவம்மா

காதல் புரிவது என்று நினைத்துக் கொண்டு
கண்ணடிப்பதுமுண்டு கன்னத்தில் பளாரென்று
அடிப்பட்ட பின்னாலே கவலைப்படுவதுமுண்டு
இது அனுபவம்......இல்லை ஆராய்ச்சி

கண்ட கண்ட பெண்ணைக்
கருத்தில் நினைத்துக் கொண்டு
கடலோரம் சுற்றுவது காதலா
கருத்தை அறிந்திடாமல் நடத்தை தெரிந்திடாமல்
மனதை பறி கொடுத்தல் காதலா

சம அன்பு உடையோராய் தரணியில் வாழ்ந்திட
சரியான நலன்களில் சேர்ந்திட
சரியான வயது தரமான கல்வி
சமமான குணத்தோடு கூடி

அமைவான உடலுள்ள ஆண் பெண்கள்
எதிர்பட அப்போது உண்டாவது காதல்
அதிகாரம் செல்வம் அது கொண்டு பெண்களை
அடிமைப் படுத்துவது சாதல்
நல்லா சோனா இல்லன்னா லூவம்மா........

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY