Kathal Kadhai Paaril
Song Lyrics

வேதனை தாளேனே ஆண்டவா
யாரிடம் சொல்வேன்....
காதல் கதை பாரில் கண்ணீரே
வாசமிகும் ரோஜா உன் நேச பனித் துளியின் (காதல்)

தோகை மேல் அன்பு மீறி
விண்ணிலே மேகம் மின்னலுடன்
பொழியும் மழை தாரையே...
காதல் கதை பாரில் கண்ணீரே..

காரிருள்தனிலே கட்டுண்ட தாரா கணங்கள்
தேடுதே வானில் தன் ஜீவ ரவி தனையே
பாலைவன மீதிலே பாயும் சுழல் காற்றிலே
நீரோட்டதனைத் தேடி நிலை தளரும் மானே..

வாடுதே மலர்ச்சோலை வான்முகிலே நீ வா
சோருதே கடலலைகள் வான் நிலவே வா
கூண்டின் கிளியானேனே....
தூண்டாத சுடரானேன் லைலா......(காதல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY