Kathal Vanile Katradi
Song Lyrics

காதல் வானிலே
காற்றாடி போலே ஆனேன் மானே
நீதியேதுமே இல்லாத மாந்தராலே
காதல் வானிலே..

நேச மோகினி எந்தன் பாசமிகும் லைலா
அவள் ஆசை நூலிலே உயிர் ஊசலாட
மெய் சேர்ந்தே... காதல் வானிலே...

எழில் வானில் விளையாடுவோமே
இரவு பகல் போலே நாமே
இசை பாடி மேக ரத மீதில் நாமே
இணையாக ஏகுவோமே..

தேன் மலரின் தென்றல்
திசை மேவி நாம் ஆடும் ஊஞ்சலே
அழியாத வானமுதம் காதலே
அன்பே நம் ஆனந்த வானெல்லை பார்

என்றும் இன்ப வாழ்வின் சுகம் காண்போம்
இரவி மதி போலே நாமே
எழில் வானில் விளையாடுவோமே
இரவு பகல் போலே நாமே...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY