Allah Enumoru Sollal
Song Lyrics

அல்லாஹ் எனுமொரு சொல்லால்
மனமகிழ்வோமே அன்பர் நாமே
அவன் பெயராலே ஏழை பசி ஆற்றுவோரே
அவனியின் மேலே அவர் பெரியோரே...(அல்லாஹ்)

மழையது பெய்வது யாராலே
மஹா தர்ம சீலர் பேராலே
எளியவர் பிழைப்பது யாராலே
என்றும் நல்ல மனதுள்ள பேராலே

அறநெறி தவறா நிறை குணத்தவர்
புகழ் நாமே சொல்லுவோமே
ஆண்டவனருளால் வான் மேலுள்ள ஜோதிபோலே
அவர் திகழ்வாரே அவனியின் மேலே....(அல்லாஹ்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY