Ada Ennanga Idhu
Kulakozhunthu
Hero Jai Sankar
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers Malasiya Vasudevan,Vani Jayaram
Year 1981
Song Lyrics

அட என்னங்க இது கை என்ன தொடுது
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
நானா தொடுறேன் அது தானா தொடுது
இணைஞ்சது ஒண்ணு ஒண்ணு ரெண்டு மனம் (அட)

கல்லைக் கட்டி மெல்லத்தான்
காமன் வித்தை சொல்லத்தான்
படச்சான் ஏனோ நீங்க பாராட்டத்தானோ...
சிலைகளைப் பார்த்தா சிலுக்குது ஆத்தா
எனக்கென்ன லாபம் எட்டி இருந்தா.....(அட)

முத்தம் சிந்தும் பெண்ணைப் பார்
மோகம் பொங்கும் கண்ணைப் பார்
அது போல் நானும் உனை முத்தாட வேணும்
கொடுப்பது ஏங்க எடுக்கணும் நீங்க
தடுக்குது நாணம் என்னத்தாங்க.....(அட)

கண்ணன் ராதை லீலைதான்
கல்லில் காணும் வேளைதான்
எனக்கோர் தாகம் அதில் நூலாச்சு தேகம்
இருவரை தாக்கும் இளமையின் ஏக்கம்
கொறைஞ்சிடத்தானே இந்த நெருக்கம்..(அட)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY