Unnai Naan Ariven
Kodeeswaran Magal
Hero Sivakumar
Music Director Chakkravarthy
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,S.P.Shailaja
Year 1981
Song Lyrics

உன்னை நான் அறிவேன் என்னை நீ அறியாய்
இந்த பூவையின் பூ மனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் எந்தன் பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ
உண்மை வார்த்தையும் பார்வையும் புரியாததோ

உன்னை நான் அறிவேன் என்னை நீ அறியாய்
இந்த பூவையின் பூ மனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ.....(உன்னை)

இது மன்னவன் கோயில் தீபமல்ல
முத்து மாலைகள் சூடிடும் ரூபமல்ல
இந்த சாகஸ பேச்சுக்கள் தேவையில்லை
எந்தன் கோயிலில் வேறொரு பாவையில்லை

மடி வரும் கொடியே நான்தானோ
மணி இதழ் யாவும் தேன்தானோ
சித்திர சிலைப் போல் இடைதான் ஆட
சிறு விழிதான் சரிகம பாட
சரசங்கள் பயிலும் சங்கீதமோ
சகலமும் புரியும் சந்தோஷமோ..(உன்னை)

பசும் புல்வெளி மீதினில் பள்ளிக் கொள்ள - வரும்
பைங்கிளி நீ என்னை அள்ளிக் கொள்ள
திருமேனியில் ஏதோ மெல்ல மெல்ல
ஒரு மின்னலே பாய்வதை என்ன சொல்ல

மணந்தேன் நான் உன்னை மாலையிலே
மறைத்தேன் மேனியை சேலையிலே
கைதான் காதலின் பூமாலை
மங்கை அறிவாள் கண்ணன் லீலை
எனைக் கொஞ்சம் நெருங்கு இன்றாவது
இடம் கொஞ்சம் கொடுத்தால் என்னாவது (உன்னை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY