Ullathil Oru Oonjal
Kodeeswaran Magal
Hero Sivakumar
Music Director Chakkravarthy
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,P.Suseela
Year 1981
Song Lyrics

உள்ளத்தில் ஒரு ஊஞ்சல் – அதில்
உட்காரும் இளந்தென்றல்
நீ அந்த பூங்காற்று நீங்காத புதுப்பாட்டு
ஆனந்த இசைப் போட்டு அன்பே நீ தாலாட்டு

உள்ளத்தில் ஒரு ஊஞ்சல் – அதில்
உட்காரும் இளந்தென்றல்
நான் அந்த பூங்காற்றோ நீ பாடும் புதுப்பாட்டோ
ஏகாந்த வேளையிலே ஏனிந்த விளையாட்டோ...

நிழலின் அருமை கோடையில் தெரியும்
உறவின் சுகந்தான் ஊடலில் புரியும்
நங்கை ஊடல் நாடக பாவம்
அந்த பாவத்தின் பெயர்தான் நாணம்

தொடத் தொட தொடர்வது மோகம்
தொட்டுவிட்டால் கெட்டு விடும் தேகம்
கொஞ்சி அணைத்தால் என்ன
கொஞ்சம் பொறுத்தால் என்ன
விட்டுக் கொடுத்தால் என்ன
எட்டி இருந்தால் என்ன.....(உள்ளத்தில்)

மன்னன் பார்வை மந்திர கவிதை
மெல்ல வென்றது மங்கையின் மனதை
போதை கொடுக்கும் பூப்போல் சிரிப்பு
பூத்துக் கிடப்பது பருவத்தின் செழிப்பு

காலம் உண்டு கனியும் போது அள்ளு
இன்னும் இன்னும் எத்தனை காலம் சொல்லு
அச்சம் தடை போடுது....ஆசை அணை போடுது
உள்ளம் திரை போடுது.....வெள்ளம் அணை மீறுது (உள்ளத்தில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY