Ondru Sernthu Selluvom
Jadhikkoru Needhi
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers T.M.Soundarajan,Chorus,Manimala
Year 1981
Song Lyrics

ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்......

பாடுபட்ட அன்னை பூமி
யாருக்கென்று பார்க்கலாம்
பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்...(ஒன்று)

நீர் பிடித்த வயலிலே ஏர் பிடித்த தோழனே
நெல்மணிக்கு சொந்தக்காரன் யாரடா உன்
நேர்மையான நெஞ்சைத் தொட்டு கூறடா
நீயடா.....நீயடா......நீயடா.......(ஒன்று)

இந்த பூமி தந்தது உன் உழைப்பில் வந்தது
வறுமை எல்லை கண்டுவிட்ட உழவனே நீ
வாழப்போகும் நேரம் எப்போ சொல்லடா
சொல்லடா.....சொல்லடா.....சொல்லடா.....(ஒன்று)

களையெடுக்கும் கைகளே காணும் வெற்றி உண்மையே
பொறுமையிலே நமக்கு இணை பூமியில்
வர்க்கப் புரட்சி ஒன்றுதான் நமக்கு நீதியே
நீதியே......நீதியே......நீதியே.......(ஒன்று)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY