Orinathu Paravaigale

Hero | Vijayakanth |
Music Director | Sankar Ganesh |
Lyricist | Pulamai Pithan |
Singers | T.M.Soundarajan,S.V.Ponnusami,Manimala |
Year | 1981 |
Song Lyrics
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க....
பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்....( ஓர் )
நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே
பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே அவர்
இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே..(ஓர்)
ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான் இங்கு
ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்
உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான் இந்த
பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்...(ஓர்)
ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா
ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்.....( ஓர் )

COMPILED AND UPDATED BY