Yetramadi Yetram Idhu
Jadhikkoru Needhi
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1981
Song Lyrics

ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்
தந்தானே தானே தந்தானே....

ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும்
அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும்..
அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே
அந்த வெள்ளம் வாழ்வில் பாயும் காதலினாலே (ஏற்றமடி)

விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே சிறு
வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே
நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு
நான் தேனும் பாலும் குடிக்க வேணும் அதைக் கேட்டு (ஏற்றமடி)

முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும் – மேக
மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும்
என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும்
உள்ளே ஏடெடுத்து எழுதாத கவிப் பிறக்கும்....(ஏற்றமடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY