Pakka Nenachen Pathuputten
Avasarakkari
Hero Mohan Kumar
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1981
Song Lyrics

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
கெட்டி மேளம் கொட்டாமலே
தொட்டு தாலிக் கட்டாமலே
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்...

புதுசா என்ன பாத்துப்புட்டே
புதுசா என்ன கேட்டுப்புட்டே
அந்த நாளில் இல்லாததா
ஆணும் பொண்ணும் அறியாததா
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே...

பள்ளிக்கூடம் போகாமலே
பருவப் பாடம் படிச்சிக்கிட்டேன்
தேவலோகம் போகாமலே
சொர்க்கலோகம் தெரிஞ்சுக்கிட்டேன்

கண்ணி வைக்காம புடிச்சுப்புட்டே
கனிய எடுத்தே நீ கடிச்சிப்புட்டே
ஆத்துல மேட்டுல காட்டுல தோப்புல
ஆசையில் என்னை நீ அள்ளிக்கிட்டே...

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
புதுசா என்ன பாத்துப்புட்டே
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
புதுசா என்ன கேட்டுப்புட்டே....
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்...

செக்கச் செவந்த செந்தாமரை
தின்னுப் பார்த்த செம்மாதுளை
உன்னப் போல பொம்பளைய
உலகில் எங்கும் பார்க்கலையே

மையும் போடாம மயக்கிப்புட்டே
மனச பறிக்காம பறிச்சுப்புட்டே
காவல மீறியே சேவல தேடியே
ஆவலால் கோழிப் போல் ஓடி வந்தேன்

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
புதுசா என்ன பாத்துப்புட்டே
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
புதுசா என்ன கேட்டுப்புட்டே....
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY