Seri Kuzhanthaikal Sevvanthi
Arumbugal
Hero Sarathbabu
Music Director M.S.Viswanathan
Lyricist Jupiter Chinnadurai
Singers S.Janaki,K.J.Jesudass
Year 1981
Song Lyrics

சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி தினம்
கீதம் இசைக்கின்ற மீன்கள் தினம்
கீதம் இசைக்கின்ற மீன்கள்...

அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள்
சிறு ஓலைக் குடில்களில் கூடி
சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்
சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்...(சேரிக்)

அந்த சொர்க்கச் சிரிப்புகள் சொர்ண விரிப்புகள்
சேற்று சகதியில் துள்ளி
தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள்
தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள்....(சேரிக்)

அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள்
சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல்
சட்டை அணிந்திட்ட மான்கள்
சட்டை அணிந்திட்ட மான்கள்......

அந்த சோலை பசுமைகள் சோக பதுமைகள்
வேலி நிழல்களில் கூடி
பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள்
பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள்

அந்த செவ்வாழை தண்டுகள் செந்தூர செப்புகள்
நடைபாதைகளில் வளரும் நமது
நாளைய நம்பிக்கை பயிர்கள்
நாளைய நம்பிக்கை பயிர்கள்.....(சேரிக்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY