Sandai Podathe Thambi
Arumbugal
Hero Sarathbabu
Music Director M.S.Viswanathan
Lyricist Jupiter Chinnadurai
Singers M.S.Viswanathan
Year 1981
Song Lyrics

சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு

அன்பும் பண்பும் தெய்வம் என்பது
ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா
அனுதினம் அதனை மதிச்சு நடந்தா
அகிலம் உன்னை போற்றுமப்பா....(சண்டை)

கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது
காட்டுமிராண்டிகள் வேலையப்பா
அடிக்கும் மனிதனை மன்னித்து நடப்பது
அண்ணல் இயேசு பாதையப்பா.....(சண்டை)

ஆயிரம் வருஷம் ஹிட்லரை போலே
வாழ்வது என்ன வாழ்க்கையப்பா
ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும்
காந்தியைப் போலே வாழணும் தம்பி (சண்டை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY