Sappida Vanga Ada
Anjatha Nenjangal
Hero Suman
Music Director Sankar Ganesh
Lyricist Thooyavan
Singers S.Janaki
Year 1981
Song Lyrics

ஆவு ஆவு ஆவு ஆவு....
ஆவு ஆவு ஆவு ஆவு....
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க
கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க.(சாப்பிட)

எத்தனையோ பசியிருக்கு ஏங்காதய்யா
பருவத்திலே பசி எடுத்தா தூங்காதய்யா
வயத்துப் பசி ஒண்ணு மட்டும் தாங்காதய்யா
சாம்பார் மணக்குதய்யா மூக்க தொளைக்குதய்யா.(ஆவு)

பீமனுக்கே சமையல் கலை சொல்லி தந்தேன்
பாற்கடலில் நெய் எடுத்து அள்ளி வந்தேன்
பாகற்காயி கசக்கும் என் கையி பட்டா இனிக்கும்
பாயாசம் காத்திருக்கு அதில் பாதாம் பருப்பிருக்கு..(ஆவு..)

ஆம்பளைங்க சேர்ந்து இங்கே வந்திருக்காங்க
சூரப்புலி வித்தையெல்லாம் செஞ்சிருக்காங்க
உங்க நெஞ்சில் உள்ளதைத்தான் நானறிவேங்க
எல்லாம் சிரிக்க வேணும் நல்லா இருக்க வேணும் (ஆவு..)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY