Chellamma Chinnamma
Anicha Malar
Hero Raj Bahadur
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers Malasiya Vasudevan,Vani Jayaram
Year 1981
Song Lyrics

காற்று வீசுதே......ஹோய்....
புது காற்று வீசுதே.......
இங்கே கதிர்கள் கூட
வயல் பரப்பில் காதல் பேசுதே.....
காதல் பேசுதே காதல் பேசுதே...

செல்லம்மா....சின்னம்மா.....
உம் மேலே ஆசை வந்ததம்மா...
உன் நெத்திப்பொட்டு என் நெஞ்சில் பட்டு
சுகம் கட்டுப்பட்டு கெடந்த கதை சொல்லம்மா..

செல்லைய்யா...சின்னய்யா
உம் மேலே ஆசை இருக்குதய்யா
பட்டு கொண்டாடுது உடல் பூவானது
ஒண்ணும் புரியாதது மொட்டு மலரானது..(செல்லம்மா)

நேரில் பார்த்தா கொய்யாப் பழம் – நான்
நெருங்கி பார்த்தா இளம் மாம்பழம்
அம்மாடியோவ்......
பறிக்கலாம் எடுக்கலாம் வாடி புள்ளே
பறிச்சத கடிக்கலாம் பொட்டப் புள்ள..(செல்லய்யா)

தானே சிரிக்கும் சின்னப் புள்ள என்
தவிப்ப தீர்த்தா என்ன புள்ள
சின்ன மச்சான்.......ஆ....ஆ....ஆஅ...
சிரிக்கிறே துடிக்கிறே நெஞ்சுக்குள்ளே
நீ நெனச்சத கொடுக்கிறேன் பஞ்சமில்ல...(செல்லய்யா)

ஆத்தங்கரையில் மஞ்சள் உரசி உன்
ஆசைய ஒடம்பில் பூசி குளிச்சி
ஆத்தாடியோவ்.......
அணைக்கலாம் இறுக்கலாம் தோப்புக்குள்ளே
ஆனந்தம் ஆயிரம் வாழ்க்கையிலே இனி
ஆனந்தம் ஆயிரம் வாழ்க்கையிலே...

செல்லம்மா....சின்னம்மா.....
உம் மேலே ஆசை வந்ததம்மா...
பட்டு கொண்டாடுது உடல் பூவானது
ஒண்ணும் புரியாதது மொட்டு மலரானது..

செல்லம்மா......சின்னய்யா....
உம் மேலே ஆசை வந்ததய்யா......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY