Neerundu Pozhikindra
Arutperum Jothi
Hero Master Sridhar
Music Director T.R.Pappa
Lyricist Ramalinga Adigalar
Singers S.Janaki
Year 1971
Song Lyrics

நீருண்டு பொழிகின்ற காருண்டு
விளைகின்ற நிலனுண்டு பலனுமுண்டு
நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட
நெறியுண்டு நிலையு முண்டு….(நீருண்டு)

ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு
உடையுண்டு கொடையு முண்டு
உண்டுண்டு மகிழவே யுணவுண்டு சாந்தமுறும்
உளமுண்டு வளமு முண்டு.....(நீருண்டு)

தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவுமுண்டு
தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியான முண்டாயி னரசே.....

தாருண்ட சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY