Sottu Sottunnu Sottu

Hero | T.R.Mahalingam |
Music Director | K.V.Mahadevan |
Lyricist | A.Maruthakasi |
Singers | P.Suseela,T.R.Mahalingam |
Year | 1960 |
Song Lyrics
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே (சொட்டு)
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே
கஞ்சிக்காக கலங்கிவிடும் கண்ணீர் துளியைப் போலே (சொட்டு)
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று
ஏழை மேலே துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுகிற வார்த்தையைப் போலே – மழை- (கொட்டு)
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு –உன்
முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோணப் புத்தியைக் காட்டுற-மழை(கொட்டு)
பழுக்க பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப் போலவே –முகம்
சிவக்குதே இப்போ அது சிரிப்பதும் எப்போ
குளிச்சு முழுகி விட்டு குளிர்ச்சியாக ஓடி வா
செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம் (கொட்டு)

COMPILED AND UPDATED BY