Vandhu Jadaiyai Ponan
Song Lyrics

வந்து ஜாடையாய்ப் போனான்
அந்த மாயக் கள்ளன் யாரோ
எந்த ஊரோ பேர்தான் எதுவோ
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்டான்

அவனா ? அழகை அள்ளி உண்ணும் மாயக்கள்ளன்
கண்டு பிடித்து விட்டாயே கெட்டிக்காரிதான்
ஆனான் இன்னுமொரு சந்தேகம்
பதில் சொல்லேன் பார்ப்போம்....

பட்டு மெத்தை முள்ளைப்போல குத்துது தோழி
நான் பழகி வந்த கிளியும் என்னை கொத்துது தோழி
வட்ட நிலா தீயை வாரிக் கொட்டுது தோழி
வந்து வந்து ஒரு மயக்கம் தட்டுது தோழி
இது ஏனென்று தெரியலே இன்னதென்று புரியல தோழி.....

புரியாது புரியாது எப்படியம்மா புரியும்?
காதல் பித்தம் தலைக்கேறி விட்டால்...எனக்கா?

கன்னல் பாலமுது கற்கண்டு தேன் பாகு
கசந்திடுதே என்ன காரணமோ தோழி
இது ஒரு நோய்தானோ இளமையில்தான் வருமோ
எவ்விதம் தான் தீருமோ....தோழி.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY