Vanna Mayil Vel Murugan
Song Lyrics

வண்ணமயில் வேல் முருகன்
எங்கள் குல தெய்வம் – அவர்
மாலையிட்ட வள்ளியம்மே
எங்கள் குலப் பொண்ணு

இமயம் முதல் குமரி வரை எங்களது நாடு
பால் பொங்கும் பழமுதிரும் இயற்கை எங்கள் வீடு
அல்லும் பகலும் உழைத்திடுவோம்
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம் ஓ...ஓ...ஓ...(வண்ணமயில்)

வில்லெடுத்து போர் புரிவோம்
வெற்றியுடன் திரும்பிடுவோம்..ஓ...ஓ...ஓ...(வண்ணமயில்)

வம்பு சண்டை போட மாட்டோம்
வந்த சண்டை விடமாட்டோம்
கோடி பொண்ணைக் கொடுத்தாலும்
கொண்ட கொள்கை விடமாட்டோம்..ஓ...ஓ..(வண்ணமயில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY