Kudagumalai Koottamunga
Boologa Rambai
Hero Gemini Ganesan
Music Director C.N.Pandurangan
Lyricist Puratchi Dasan
Singers Seerkazhi Govindarajan,A.G.Rathnamala,S.V.Ponnusami
Year 1958
Song Lyrics

குடகுமலை கூட்டமுங்க தில்லேலேலோ –சாமி
குறி சொல்லி பொழைக்க வந்தோம் தில்லேலேலோ
உங்க மகராசன் ராஜ்ஜியத்திலே தில்லேலேலோ –நாங்க
குறி சொல்லி பொழைக்க வந்தோம் தில்லேலேலோ..சாமி

பாசிப் பகளம் வாங்கலிங்களா சாமி
பச்சை குத்திப் பாக்கலிங்களா சாமி
தேளுப் பச்ச மீனுப் பச்ச குத்திப்பாருங்க –அம்மே
ஜிமிக்கி கல்லு குள்ளநரிப் பல்லு வாங்கிப் பாருங்க

ஜெகஜால வித்தையெல்லாம் செய்திடுவோம்
எங்க திட்டமான பொழப்ப கேட்டா அசந்திடுவீங்க
சிட்டு குருவிப் பொண்ணே அடி என்
சீனத்துக் கிளியே கண்ணே நேத்து

திட்டம் போட்டு எங்கே போனேடி – அதை
எனக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லடி..
சொல்லட்டுமா.......சொல்லு......

கழுகு மலைச் சாரலிலே மச்சான்
கண்ணி வெச்சி காத்திருந்தேன்
குள்ள நரி காட கௌதாரி
கட்டோட விழுந்திடுச்சி எல்லாம்
கட்டோட விழுந்திடுச்சி.....
உங்க மகராசன் ராஜ்ஜியத்திலே தில்லேலேலோ – எங்க
மனசு போல ஜெயங் கிடைக்கணும் தில்லேலேலோ...

ஆளப்பாரு சோளக் கொல்லே பொம்மே
உடம்ப வளைச்சி வேலை செய்து
பொழக்கணுங்குற அக்கரையே இல்லே
ஊர சுத்தி உனக்குப் போடணும் (என்னாது)
அதிலேயுன் உருட்டலும் அடங்கி நடக்கணும்

நீ காளப் போல தின்னு திரியிறே
என் சிங்கமே சிங்கம்
காவாலியா ஊரச் சுத்துற (ஊஹூம்)
என் சிங்கமே சிங்கம்.. காவாலியா ஊரச் சுத்துற.

கஸ்தூரி கோரோஜனே ஜவ்வாது குங்குமப்பூ
கமகமக்கும் புனுகு வாங்கிப் பாருங்க
இந்தாங்க மோந்து பாருங்க வாங்க சாமியே..
உங்க மகராசன் ராஜ்ஜியத்திலே தில்லேலேலோ – எங்க
மனசு போல ஜெயங் கிடைக்கணும் தில்லேலேலோ...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY