Kannalar Ingu Varuvar
Song Lyrics

கண்ணாளர் இங்கு வருவார்
கனிவான இன்பம் தருவார்
எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே....(கண்ணாளர்)

கண்ணோடு கண்கள் பேசும்
கலை ஞானம் அங்கு வீசும்
எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே....(கண்ணாளர்)

மானோடும் சோலை மலர் தாவும் தென்றல்
மகிழ்வான காதல் யாழோடும் மேவும்
பாமாலை போல இனிதாகும் எந்தன் வாழ்வே
ஹஹ் ஹஹ்ஹா......லல்லல்லா.....(கண்ணாளர்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY