Om Endra Pranavathin
Boologa Rambai
Hero Gemini Ganesan
Music Director C.N.Pandurangan
Lyricist P.K.Aatkondan
Singers Jikki,S.C.Krishnan,Trichy Loganathan,A.G.Rathnamala
Year 1958
Song Lyrics

ஓம் என்ற ப்ரணவத்தின் ஓங்கார ரூபனே
உலகத்தை ஆட்கொண்ட உமையாள் மைந்தனே
உன்னடி பணிந்தோம் கணபதி அப்பனே.....

வேள்வி மலை குறிஞ்சி நிலம்
வள்ளியம்மே பிறந்த நிலம்
நம்பிராசன் முறை மகளாம்
நங்கையவள் குறமகளாம்
வள்ளிப் பொண்ணு அழகுப் பொண்ணு
வயது வந்த கன்னிப் பொண்ணு..

கலகக்கார நாரதனும்
கண்டான் வள்ளிப் பொண்ணை
கழுகாசல வேலனிடம் சொன்னான் அழகுதன்னை
அவன் சொன்னான் அழகு தன்னை...

குறத்தி வள்ளி அழகைக் கேட்டுத்
தினைப் புனத்தில் அவளைக்
காண வந்தான் வடிவேலன்
ஓடி வந்தான் வடிவேலன்....

சோ...சோ...சோ...கம்பு சோளம் தின்னவரும்
காக்கா குருவி மைனாக்களே
கவண் வீசி துரத்திடுவேன் சோ...சோ..சோ...

ஆயலோட்டும் பெண்ணே.....
வலை தப்பி ஓடிய மான் ஒன்று இப்பக்கம்
வந்ததுண்டோ அதைக் கண்டதுண்டோ
ஆயலோட்டும் பெண்ணே ஆவியே என்
ஆருயிர் சஞ்சீவியே மன்மதன் எனும்
பாவியே மலர்கணையால் தூவியே
வாட்டுரானடி கண்ணே ஆயலோட்டும் பெண்ணே

மதிகெட்டு மான் தேடி மாதெந்தன் முன் வந்த
மானம் வெட்கம் கெட்ட மூடா...போடா...வேடா..

வேடுவர்கள் தேடியதும்
வேங்கை மரமானான் முருகன்
வேங்கை மரத்தை வெட்டச் சொன்னான்
வேந்தன் நம்பி ராஜன்.....ஆமா......
மரமாகி நின்ற அந்த மாயவேலன் இப்போ
உருமாறி கிழமாகி வந்தான் அங்கே

பசியால் உடல் மெலிந்தேன் கொஞ்சம்
புசிக்க அமுதளிப்பாய் பெண்ணே
வாங்க தாத்தா வாங்க வந்து களைப்பாருங்க
கனிவான மா, பலா, தினைமாவும் இந்தாங்க
தின்னு களைப்பாருங்க வாங்க தாத்தா வாங்க

தாகம் தீர்ந்ததடி என் தங்கமே
மோகம் தீரவில்லை சொர்ணமே
கிட்டே வந்து கை பிடித்து தொட்டு என்னை
தூக்கி விட்டு செல்லு கொஞ்சம் நில்லு.....

மீசை நரைத்துப் போச்சே கிழவா
ஆசை நரைக்கவில்லையே
தேகம் தளர்ந்து போயும் உந்தன்
திமிரும் அடங்கவில்லையே கிழவா...

கணபதியின் உதவிதனை கந்தன் பெற நினைத்தான்
கஜபதியும் யானையாய் ஓடோடி வந்தான்
காட்சியே தந்தான்

குஞ்சரத்தைக் கண்ட வள்ளி சஞ்சலமே கொண்டாள்
கெஞ்சியவள் கிழவனிடம் தஞ்சம் பெற சென்றாள்
கிட்டே பயந்து வந்த பெண்ணை கந்தன்
கட்டி அணைத்த விந்தை என்ன சொல்லுவோம்

வள்ளிப் பொண்ணை சிறையெடுத்தான்
மால் மருகன் வேலன்
வானவரும் வாழ்த்துக் கூற வள்ளி குகனை
மணந்தாளே மங்களமாய் வாழ்ந்தாளே..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY