Aasai Nenjame Alai
Song Lyrics

ஆசை நெஞ்சமே அலைமோதும் கடல் மீது நானே
அசைந்தாடும் கலம் போல ஆனேன்
இனிப்பான மொழி பேசும் எழிலே
எங்கே நீ சென்றாயோ அறியேன் (ஆசை)

வானோடு விளையாடும் முகிலே
வருவாய் என் கதை கேட்க நீயே
தேனோடும் எழிற் காதல் விஷமோ
திருவே நம் எதிர்காலம் எதுவோ....(ஆசை)

வேகாமல் வேகும் என் உள்ளம்
வீணாகப் புண்ணாகிப் போமோ
வாடாமல் மணம் வீசும் அன்பே
வளமான வாழ்வென்று காண்போம் நாம்
வளமான வாழ்வென்று காண்போம் (ஆசை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY