Vazhvil Nee Manimagudam
Song Lyrics

வாழ்வில் நீ மணிமகுடம்
வளரும் இடம் சிறைக்கூடம்
கடவுள் செயல் யாரறிவார்
காலமெனும் ஊஞ்சலிலே
கண்ணே நீ கண் வளராய்........

தென்றல் தமிழ்க் காவியமே
அன்றொரு நாள் உன் தந்தை
கன்னல் காதல் சோலையிலே
சொன்ன உண்மை வீண் கனவோ
கண்ணே நீ கண் வளராய்........

நீதி தேவன் சோதனையோ
நானறியேன் தேன் துளியே
ஊமையாகி உன் தந்தை
உலக நீதி தவறி விட்டார்
கண்ணே நீ கண் வளராய்........

ஜோதி நிலா தாதியர்கள்
சூழ்ந்திருந்தே தாலாட்ட
சூழ்நிலையின் கோலமடா
தூங்குகின்றாய் மண் மீதே
கண்ணே நீ கண் வளராய்........

வானமுகில் பஞ்சணையில்
வைரமணித் தாரகைகள்
கானக் குயில் இசைத் தழுவும்
காலம் மாறிப் போனதடா
கண்ணே நீ கண் வளராய்........(வாழ்வில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY