Ooru Urangum Rathiri
Tharaiyil Pootha Malar
Hero Prakash
Music Director Gangai Amaran
Lyricist Gangai Amaran
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1980
Song Lyrics

ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்
உன்ன தேடி வந்தேன்.......
இங்கே வா ஒண்ணு தா என் ரோசாப்பூவே (ஊரு)

தாலி கட்டும் காலம் வரையிலும் தாங்கலையோ
இன்னும் தூங்கலையோ
நானுமொரு ஆசை இருக்கிற பொண்ணில்லையோ
என் கண்ணில்லையோ
மேளம் கொட்ட வேணும் தாலிக் கட்ட வேணும்
அப்ப இது வேணும்

ரொம்ப குளிரு அடிக்குது கிட்ட வாடி
எண்ண கனவு சிரிக்குது கட்ட வாடி
அக்கம் பக்கம் ஆளு இருக்கிற
சத்தம் கேட்குது போங்க.......(ஊரு உறங்கும்)

எப்ப இந்த நேரம் வருமின்னு காத்திருந்தேன்
உன்னப் பார்த்திருந்தேன்
எண்ணி எண்ணி வந்த உறக்கத்த தூங்கவிட்டேன்
நெஞ்ச ஏங்க விட்டேன்

தொட்டுக் கொள்ள போறேன் கிட்டத்தில வாரேன்
விட்டு போக மாட்டேன்
தொட்டுப் பிடிக்க தோள் அருகே வந்த ஆச ???
ரொம்ப விசயம் இருக்குது நாம பேச
அள்ளிக் கொள்ள ஆச இருக்குது
கொஞ்சம் பக்கத்துல வாம்மா.....(ஊரு உறங்கும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY