Anname Sorname Vairame
Tharaiyil Pootha Malar
Hero Prakash
Music Director Gangai Amaran
Lyricist Gangai Amaran
Singers Malasiya Vasudevan
Year 1980
Song Lyrics

அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி
அடியே நான் சின்னப்பா மாதிரி
நீ அந்த கண்ணாம்பா மாதிரி
எம்.கே.டி. பாகவதர் பாடாத
தெம்மாங்கு சங்கதியை பாடுறேன் ஆடவாடி (அன்னமே)

கரையேறியே பாயுது கெண்ட
அலை போலவே ஆடட்டும் கொண்ட
உன் காலுல குலுங்குது தண்ட
இங்கு காயுது பாடுற தோண்ட

தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே
நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே
நீ ஆடு புள்ளே...ஏ....ஏ....ஏ....ஏ.....ஏ......
என் கண்ணாட்டி மயிலாட்டம்
கஸ்தூரி மானாட்டம் தாளத்தோட நீயாடடி (அன்னமே)

நீ ஆவணி மாதத்து மேகம் உன்
தாவணி தூண்டுது மோகம்
இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம்
கண்ணு ஏனடி வேர்க்குது தேகம்

வண்டு மொய்க்காத கனகாம்பரம் நீ
யாரும் கொய்யாத கொய்யாப்பழம்
அடி வெள்ளையம்மா........ஆ...ஆ....ஆஆ..
நான் உன்னாச மதுர வீரன்
உண்மையிலே மதுரக்காரன் செல்லக்குட்டி நீயாடடி (அன்னமே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY