Iravu Varum Pagalum Varum
Iravum Pagalum
Hero Jaisankar
Music Director T.R.Pappa
Lyricist Aalangudi Somu
Singers T.M.Soundarajan
Year 1965
Song Lyrics

இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான் இதயம் ஒன்று தான் (இரவு)

பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான் (இரவு)

இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான் (இரவு)

விழி இரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்று தான் பார்வை ஒன்று தான்
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்று தான் தெய்வம் ஒன்று தான் (இரவு)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY