Nilaiyaga En Nenjil
Aada Vantha Deivam
Hero T.R.Mahalingam
Music Director K.V.Mahadevan
Lyricist A.Maruthakasi
Singers P.Suseela
Year 1960
Song Lyrics

நிலையாக என் நெஞ்சில் ஒளிவீசும் தீபம்

நீயே எந்நாளும் என் காதல் கீதம் (நிலையாக)


நிலைமாறியே நான் பிரிந்தேகலாம் என்

நேசக் காதல் ஆசையெல்லாம் கனவாகலாம்

எத்தனை ஜென்மம் நானெடுத்தாலும்

இனித்திடும் உந்தன் எண்ணம் நீங்குமா (நிலையாக)


ஒன்று சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே

இன்பம் நேராது என்பதும் இல்லையே

உள்ளம் கொள்ளை கொண்ட அன்பர் நல்வாழ்வை நாடும்

உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்


தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும் அது

நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது

நீ என்றும் வாழ வேண்டுமே உன் எண்ணம் ஒன்றே போதுமே

அதுதான் இன்பமே என் இன்பமே இன்பமே.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY