Aasaiyai Kondru Vidu
Aada Vantha Deivam
Hero T.R.Mahalingam
Music Director K.V.Mahadevan
Lyricist A.Maruthakasi
Singers Seerkazhi Govindarajan
Year 1960
Song Lyrics

ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்

ஆவியைப் போக்கிவிடு

பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா

பாதையைக் காட்டிவிடு (ஆசையை)


அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்

அன்பையும் பார்க்காது –அதன்

வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை

வாழவும் வைக்காது (ஆசையை)


ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்

காதுக்கு கேட்காது காதலின் கீதம்

நாதமில்லா வீணையும் ஆகி

வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும் (ஆசையை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY