Dhinamithuve Suba Dhinamithuve
KONJUMSALANGAI
Hero GEMINI
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.Seetharaman
Singers T.M.Soundarajan,S.C.Krishnan
Year 1962
Song Lyrics

தினமிதுவே சுபதினமிதுவே
திசையெல்லாம் கொண்டாடும்
தினமிதுவே சுபதினமிதுவே..

நினைவில் நின்றாடுறாள் நிகரில்லா அபராஜிதா
அணையாத தீபமாய்
அறிவுக் கண்ணொளி வீசிடச் செய்த
தினமிதுவே சுபதினமிதுவே.....

தங்க நிறப் பயிர் போல மேனி – இந்தத்
தாரணியோர் மெச்சும் கலாராணி
மங்கையவள் பெயரைச் சொன்னா
வளம் பொங்கி விளையுமடா காணி (தங்க)

தல்லாலல்லா..... தல்லாலல்லாலே......
ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி
அபராஜிதா உள்ளம்போல
வெளுத்துக் குடுப்போம் தம்பி
நல்லா வெளுத்து குடுப்போம் தம்பி...(ஆடை)

மயிலைப் போல நடனமாடுவாளே
நல்லா நடனமாடுவாளே
புள்ளிமானைப் போல துள்ளி ஓடுவாளே
குயிலைப் போல பாட்டுப் பாடுவா
கிளியைப் போல கொஞ்சிப் பேசுவா (மயிலை)

நாட்டியக்காரிக்கிந்த நாடு இல்லை
என்று சொன்ன நாட்டிலே
நடக்குதின்று இந்த நாட்டியத் திருவிழா
நல்ல நாட்டியத் திருவிழா......

.

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY