Vanna Tamizh Sornakili
Kaveriyin Kanavan
Hero Muthukrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Udumalai Narayanakavi
Singers M.L.Vasanthakumari
Year 1959
Song Lyrics

வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி
வாய் திறந்தாள்
வள்ளுவன் சொல் தெள்ளமுதை
மெல்ல மொழிந்தாள்.......(வண்ணத்)

கன்னலடு பாகுமலர்க்
கள்ளை வெறுத்தேன் – அவள்
கானரசத் தேனையுண்டு
ஞானம் படைத்தேன் – இன்ப (வண்ணத்)

மன்னும் செவிக்குணவு இல்லாதபோது –சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் – எனவோதும்
பொன்னெழுத்து ஏடுதனை புவிமீது கொண்ட
கன்னி எழில் மாறாத கலைமாது – எங்கள் (வண்ணத்)

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர் – என்றே
அமிழ்தினும் இனியதொரு புகழ்சால் பொன்மொழியை
வழங்கி வற்றாத வளம் பெற்றாள் – எங்கள்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY