Parandhu Vandha Paingiliye
Kaveriyin Kanavan
Hero Muthukrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Thanjai Ramaiya Dass
Singers Trichy Loganathan
Year 1959
Song Lyrics

பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா – ஒன்னை
மறந்து நானும் தூங்குவது என்னம்மா
விருந்து என்று நடக்குமுன்னு காத்திருந்தேன் நிச்சயமா
தெரிஞ்சிருந்த மன்மதன் கூட மனசு வச்சான் கச்சிதமா (பறந்து)

புள்ளையைத் தூக்கும் வயசிலே நீ
புஸ்தகம் தூக்கி வந்ததும்
புன்னகையால் கதையும் பேசி
உன் மனசைத் தந்ததும்

உள்ளம் ஒண்ணு உருவம் ரெண்டாய்
ஒளிஞ்சி ஒளிஞ்சி திரிஞ்சதும்
உனக்கும் எனக்கும் தெரிஞ்சிட்டாலும் – இந்த
உலகம் தெரிய வேண்டுமென்று....
ராம் பட்டா பரம்பரை நான்
லாலா புறம் வடகரை........(பறந்து)

காவேரியில் போட்ட தூண்டி
கங்கா நதியில் மிதக்குமா
காலா மீனு கவ்வுற முள்ளை
கண்ட மீனு கவ்விடுமா

சாவேரியின் ஆரோகணம் நீலாம்பரிக்கு சேருமா
சங்கதி யாவும் தெரிஞ்சதாலே – இந்த
ஜதையின் மனசு புரிஞ்சதாலே
ராம் பட்டா பரம்பரை நான்
லாலா புறம் வடகரை........(பறந்து)

அவுங்க பிளானு இவுங்க பிளானு
எவுங்க பிளானு செல்லாது
ஆகாயத்தில் பறந்து போன
ஏரோப்ளேனும் நில்லாது

அம்மா போடும் அணுகுண்டுதான்
யாரையுமே வல்லாது
அடக்குமுறை கூண்டுக்குள்ளே – உன்னை
அடைச்சு வச்சும் அதிசயமாய்...(பறந்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY