Thanjavur Bommaiyai
Kaveriyin Kanavan
Hero Muthukrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Thanjai Ramaiya Dass
Singers Trichy Loganathan
Year 1959
Song Lyrics

தஞ்சாவூர் பொம்மையைப் போல்
தலையாட்டும் குருவிகளா – உங்களுக்குத்
தன்மானமே என்றும் சன்மானமாகும் இதை மறவாதீர்
தமிழ் நாட்டுப் பறவைகளா.....

தந்தனத்தானா தனதந்தினா தந்தானக் குயிலே
உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சிக்கத்தான் வந்தேனே மயிலே.....(தந்தன))

பத்தாவது படிச்ச பொண்ணே பரீட்சை பாசாச்சா – நீ
படிக்காம கோட்டடிச்சு வருஷம் பாசாச்சா – அந்த
குத்தாலத்து நீர் வீழ்ச்சி கொடைக்கானல் சீசனெல்லாம்
சுத்தாமலே சுத்தி வர ஷோக்கு வந்தாச்சா (தந்தன)

பொம்பளைங்க சிரிச்சா கற்பின் வீரம் போயிடும்
புகையிலையை விரிச்சு விட்டா காரம் போயிடும்
செம்பவள உதட்டின் மேலே டேஞ்சர் சாயம் இருப்பதினால்
சின்னஞ்சிறு மைனரெல்லாம் தெரிஞ்சுப் பழகணும் (தந்தன)

பாழும் உலகைப் புரிஞ்சிக்காத பங்காரு பாப்பா – உன்
பர்சனால்டிக் கேத்தது தான் பைஜாமா ஜிப்பா
காலம் போற தினுசைப் பாத்து கவனமாகக் கற்பைக் காத்து
ஆளைக் கண்டு மயங்கிடாமே போகணும் ரப்பா....(தந்தன)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY