Chinna Chinna Nadai
Kaveriyin Kanavan
Hero Muthukrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist P.K.Muthusamy
Singers P.Suseela
Year 1959
Song Lyrics

சின்னச் சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
அம்மா என்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுதடா.....(சின்ன)

விண்ணிலாடும் வெண்ணிலவே
வீட்டிலாடும் மணிவிளக்கே
உன்னில் உயர்ந்தவர் உலகில் யாரோ
கண்ணிலாடும் காவியமே.....(சின்ன)

ஆடி வரும் தென்றலென்பார்
பாடி வரும் அருவி என்பார்
தேடி வரும் செல்வம் உன்போல்
தெய்வம் வேறு இல்லையடா.....(சின்ன)

கொஞ்சும் மழலை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா....(சீனா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY