Kanni Vayadhu Ilam
Kaveriyin Kanavan
Hero Muthukrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist P.K.Muthusamy
Singers P.Suseela
Year 1959
Song Lyrics

கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார் – அவர்
ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார் (கன்னி)

தாலி கட்டிய நாள் முதலாய்
தலைவரின் நிழலையும் கண்டதில்லை
ஆழி சூழ்ந்த உலகத்திலே – என்னை
அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார் (கன்னி)

இதமில்லாதவர் செயலாலே
இல்லறப் படகும் கவிழ்ந்ததடா
சிதறிய நாங்கள் இதுவரையில்
திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை (கன்னி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY