Kannathile Vizhum Pallathile
Kaveriyin Kanavan
Hero Muthukrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Thanjai Ramaiya Dass
Singers Trichy Loganathan
Year 1959
Song Lyrics

கன்னத்திலே விழும் பள்ளத்திலே
அதிர்ஷ்டம் காணுதென்று
காணாத கனவெல்லாம் நான்காம் சாமத்திலே
நானும் கண்டு

உன் வண்ணத்தையே ரவிவர்மாவைப் போல்
வரைய ஆசை கொண்டு
வந்து நின்றேன் சந்திர வதனம் கண்டேன்
வாழ்த்தி நின்றேன் – கண்ணே.....

வெள்ளி அன்னமே வாராயோ – இந்த
வேடிக்கையை நீ பாராயோ......(வெள்ளி)

துள்ளி விளையாடும் புள்ளிமான் – கண்ட
சொப்பனம் பலித்தது கேளாயோ
வில்லை ஏந்தாத வேடுவன் காதல்
விஷயம் பலித்தது பாராயோ....(வெள்ளி)

ஆத்திரப்படும் நேத்திரங்கள் – சதி
செய்தாலும் இனி முடியாது அசைக்க முடியாது
அன்பின் வலையிலே சிக்கியதால் – இனி
யாருக்குமே இது படியாது என்றும் படியாது (வெள்ளி)

சாத்திரம் ஜோசியம் பாராமல் சேர்ந்த ஜதைக்கு
இணையேதும் கிடையாது நிகர் கிடையாது
இந்த சதிபதியின் வாழ்வு சரியா தப்பா சரியா தப்பா
இதை புரியாதவர்க்கு புத்தி சொல்லவே வாராயோ..(வெள்ளி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY