Thanimaiyile Inimai Kana
Aadiperukku
Hero GEMINI
Music Director A.M.Raja
Lyricist K.D.Santhanam
Singers P.Suseela,A.M.Raja
Year 1962
Song Lyrics

தனிமையிலே … …………………..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா…
தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதினால் சுகம் வருமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தில் மாங்காய் விழுந்திடுமா (தனிமையிலே

மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
செங்கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடலிருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை (தனிமையிலே)

பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்

கொடி படையுடனே பவனி வரும் காவலரும்

கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்

இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும் (தனிமையிலே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY