Valarvathu Kannukku
Thozhilali
Hero M.G.R.
Music Director K.V.Mahadevan
Lyricist Aalangudi Somu
Singers T.M.Soundarajan,L.R.Eswari
Year 1964
Song Lyrics வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது

மலையில் நதிகள் பிறக்கும்
அது கடலில் சென்றே கலக்கும்
மனதில் ஆசைகள் பிறக்கும்
அந்த மயக்கம் உறவை வளர்க்கும்
ஆஹாஹாஹா.... (வளர்வது)

பறவைக்கு வீதி வானம்
இந்தப் பாவைக்கு வீதி நாணம்
உறவுக்கு வீதி உள்ளம்
அதன் உயர்வுக்கு வீதி எண்ணம்
ஆஹாஹாஹா.... (வளர்வது)

இதழோ மதுத் தேன் கிண்ணம்
அதன் எழிலைக் கூட்டுது கன்னம்
இளமை தீட்டிய வண்ணம்
அது உமக்கே கிடைப்பது திண்ணம் (வளர்வது)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY