Azhagan Azhagan Aanazhagan
Thozhilali
Hero M.G.R.
Music Director K.V.Mahadevan
Lyricist Mayavanathan
Singers S.Janaki,P.Suseela
Year 1964
Song Lyrics

அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன் (அழகன்)

அணைத்ததை நினைத்தே துடிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்
தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்

பாலிலும் தேனிலும் குளிக்க வைத்தான்
பார்வையிலே மயக்கம் வைத்தான்
கலைகள் யாவும் படிக்க வைத்தான்
கதையில் பாதி நடத்தி வைத்தான் (அழகன்)

இருவர் மனதிலும் ஒரு உறவு ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு புது நிலவு
காதல் வழியில் புதுத் திருப்பம் புதுத் திருப்பம்
என்ன வருமோ பொறுத்திருப்போம் பொறுத்திருப்போம் (அழகன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY