
Hero | GEMINI |
Music Director | A.M.Raja |
Lyricist | Kothamangalam Subbu |
Singers | P.Suseela,A.M.Raja |
Year | 1962 |
மலையில் பிறவா சிறு தென்றல்
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு எது? பெண்
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே
அறியணும் ஆண்கள் முன்னாலே (பெண்கள்)
உழுவார் விதை விதைப்பார் உச்சி வெயில் தனில் நிற்பார்
ஊர் ஊராய் சுமை சுமந்து ஓடி விலை கூறிடுவார்
எழுவார் உதிக்கு முன்னே இருட்டிய பின் வந்திடுவார்
இப்பாடு பட்டுலகில் இருப்பதன் காரணம் என்ன?
வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது
வாழ நினைப்பது பெண்ணாலே
வானமளந்த ஞானிகளும் தன்னை மறந்தது பெண்ணாலே
தன்னை மறந்தது பெண்ணாலே (பெண்கள்)
பூத்துக் குலுங்கி நிற்கும் பொற்கொடியே ஆனாலும்
காற்றில் வீழ்காமல் காப்பாற்றும் துணை யாரோ?
கொம்பில்லாமல் கொடி படர்ந்தால்
குப்பை மேட்டில் நிற்படுமே
அன்பெனும் கொடி தான் படர்வதற்கே
ஆணே துணையாய் வேணுமம்மா
ஆணே துணையாய் வேணுமம்மா
ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?
காசி நகர் வீதியிலே கடனுக்கு மனைவி தன்னை
பேசி விலைக்கு விற்ற பெரிய மனிதன் யாரோ? அரிச்சந்திரன்
அடையாள மோதிரம் தான் ஆற்றில் விழுந்த உடன்
அழகு சகுந்தலையை யாரடி நீ என்றதாரோ? துஷ்யந்தன்
காரிருளில் கானகத்தில் காதலியைக் கைவிட்டு
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?நளச் சக்கரவர்த்தி
பெண்ணைத் தவிக்க விடுவதிலே
பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பேறு பெற்றவன் ஆண்பிள்ளை (பெண்கள்)
பெண்ணை நம்பிக் கெட்டவர்கள் பேர் தெரிந்தால் சொல்லட்டும்
காட்டுக்கு இராமன் போனதற்கு கைகேயி தானே காரணமாம்
இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டால் இதுவும் கேட்டிட மாட்டாளா?
மாதவியாலே கோவலனார் மதுரை சந்தியில் மாளல்லையா?
கண்ணகியாலே கோவலனார் கதையே காவியமாகல்லையா?
கதையே காவியமாகல்லையா? (பெண்கள்)
ஏசு, காந்தி மஹான், புத்தரைப் போல்
இது வரை பெண்களில் இருந்ததுண்டோ?
ஏசு, காந்தி மகான், புத்தரையும்
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஈன்றது எங்கள் பெண் குலமே
பெருமைகள் எல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே

COMPILED AND UPDATED BY