Kannizhantha Manithar Munne
Aadiperukku
Hero GEMINI
Music Director A.M.Raja
Lyricist Kannadasan
Singers P.Suseela,A.M.Raja
Year 1962
Song Lyrics

கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் –இரு

காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்

பாடல் இசைத்தார்.........................


கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார் –இரு

காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார்

பாட்டை முடித்தார் .............................. (கண்ணிழந்த)


ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு தடையை விதித்தார்
காய்ந்துவிட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்


பண்ணறியா மனிதர் முன்னே வீணையை வைத்தார்

பண்ணறிந்தும் மீட்டும் முன்னே யாழைப் பறித்தார்

யாழைப் பறித்தார் ........................... (கண்ணிழந்த)


பெண் பெருமை பேசி பேசி காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால் பெண்ணை அழிப்பார்
முன்னும் இல்லை பின்னும் இல்லை முடிவும் இல்லையே
மூடர் செய்த விதிகளுக்கு தெளிவும் இல்லையே (கண்ணி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY