Thunbam Theeratho Thuyaram
Thanga Rathinam
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist S.S.Rajendran
Singers T.M.Soundarajan,K.Jamunarani
Year 1960
Song Lyrics

துன்பம் தீராதோ
துயரம் மாறாதோ – இனி
இன்பம் நேராதோ வாழ்வில்
இனிமை சேராதோ........(துன்பம்)

ஜாதி ஒழியாதோ இந்த
சஞ்சலம் தீராதோ
நீதி தழைக்காதோ நாட்டில்
நேர்மை நிலைக்காதோ...(துன்பம்)

மேகம் சூழ்ந்திடுமா வாழ்வு
மின்னல் ஆகிடுமா
சோகம் மிஞ்சிடுமோ - தீயோர்
துரோகம் வென்றிடுமா......(துன்பம்)

காரிருள் அகலுதடி நம்
காதல் வெல்லுமடி
காலமும் மாறுதடி நம்
கவலையும் தீருமடி

பொங்கி எழும் ஆசையாலே
புள்ளினமாய் நாம் மாறி
சிங்கார வானத்திலே
சிறகடித்து பறந்திடுவோம்
சிறகடித்து பறந்திடுவோம்.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY