Pagalellam Velai Seithe
Velaikkari Magal
Hero N.T.Rama Rao
Music Director C.R.Subbaraman
Lyricist K.Devanarayanan
Singers M.L.Vasanthakumari,Devanarayanan
Year 1953
Song Lyrics

பகலெல்லாம் வேலை செய்தே
பொழுதோடே வந்தேனே
சாப்பாட்டுக்கு சமையல் ஏதும் செய்தாயா நீ

பொழுதெல்லாம் வண்டியை ஒட்டி
தொரை போல வந்தாயே
பூவாவுக்கு ரேஷன் வாங்கி வரவேணாமா

மனமெல்லாம் உன் மேல் வைத்தே
மறந்தேனே ரேஷன் வாங்க
நிஜமானால் சாப்பாடேன் நானிருக்கும் போது
என் நினைவே போதும்

அடிமை வேலை செய்தாலும்
குடிசைக்குள் குடி இருந்தாலும்
அன்பால் மனம் ஒன்றிய வாழ்வே
இன்புறும் வாழ்வு

ஓ.....வண்டியை ஓட்டாதே உன் அப்பா போலே
ஓ....வாசலைக் கூட்டாதே உன் அம்மா போலே

வண்டிக்காரன் மகனானாலும் வக்கீலாகணும்
மிக நல்லவன் என்னும் பேரும்
மேலான புகழும் சீரும்
மகராசன் போலே செல்வம் யாவையும் சேர்ப்பாய்
எங்கள் ஆசையைத் தீர்ப்பாய்

ஓ.....பெரியவனானால் என்னை நீ மறந்திடாதே
ஓ..பேரும் பணமும் வந்தால் குணம் மாறிடாதே

எளிமையாக வாழ்ந்தது என்றும்
நினைவில் வரவேணும்
இனிதாகும் மனையாள் நீயே
திரு வாழும் மனையும் இதுவே
இணையில்லா நமது செல்வம் யாவும் இவனே (அடிமை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY