Kannale Pesum Kathal
Song Lyrics

கண்ணாலே பேசும் கண்ணாலே பேசும்

கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா

காதில்லா ஊசி விலை போகுமா ஆ....ஆ....ஆ. (கண்ணாலே)


பணத்தாலே காதல் பயிர் வாழுமா - அள்ளிக்

கொடுத்தாலும் நிலையான பலன் காணுமா

மனத்தாலே உயிர் வாழும் பெண் வாழ்விலே

அன்பு மலராமல் வளராமல் மணம் வீசுமா (கண்ணாலே)


மலரோடு பேசும் மது வண்டு போலே – அன்பு

மனந்தோறும் உயிர் வாழும் கலை மங்கை நான்

வலை வீசி குளிர் தென்றல் பிரிப்பார் உண்டோ

பொங்கும் கடல் வீசும் அலை ஓசை தடுப்பார் உண்டோ (கண்ணாலே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY