Selaiyil Moodiya Karumbu
Thedi Vantha Lakshmi
Hero Jaisankar
Music Director M.S.Sanjay
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1973
Song Lyrics

சேலையில் மூடிய கரும்பு
செம்மாதுளையே திரும்பு
ஆயிரம் பேர்கள் அவனுக்கு உண்டு
அதனால் என்னை விரும்பு பேபி.....ஆரீராரோ
நான் உன்னை தாலாட்டவா

பேர்களை மாற்றும் குறும்பு
பெண்மை என்பது அரும்பு
கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும்
காத்திருந்தால் தான் விருந்து ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ

ஒரு பக்கம் பார்த்தால் நீ மல்லிகைத் தோட்டமடி
மறு பக்கம் பார்த்தால் நீ மாம்பழக் கூட்டமடி
கடை போடலாம் வா விலை பேசலாம் வா
உறவுக்குத் தேவை ஜோடி அடி ஊஞ்சலில் வாடி (பேர்களை)

இடைவிட்ட பூக்கள் உன் எண்ணத்தை வாட்டியதோ
எழில் கொண்ட மேனி இங்கென்னென்ன காட்டியதோ
என்னைக் கொஞ்சலாம் நீ உனை மிஞ்சுவேன் நான்
அனுபவமில்லை ஐயா என் ஆசையும் பொய்யா (சோலையில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY