Annaiyin Arule Vaa
Aadiperukku
Hero GEMINI
Music Director A.M.Raja
Lyricist Kothamangalam Subbu
Singers Seerkazhi Govindarajan
Year 1962
Song Lyrics

அன்னையின் அருளே வா வா வா
ஆடிப் பெருக்கே வா வா வா
பொன்னிப் புனலே வா வா வா
பொங்கும் பாலே வா வா வா (அன்னையின்)

குடகில் ஊற்றுக் கண்ணாகி
குலத்தைக் காக்கும் பெண்ணாகி
கண்ணன் பாடி அணை தாண்டி
கார்முகில் வண்ணனை வலம் வந்து (அன்னையின்)

திருவாய் மொழியாம் நாலாயிரமும்
தேனாய்ப் பெருகும் தமிழே வா
திருமால் தனக்கே மாலையாகி
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே (அன்னையின்)

கட்டிக் கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை நயமும் நீ
முத்துத் தாண்டவர் பாடலிலே
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ

வான் பொய்த்தாலும் தான் பொய்யா
வற்றாக் கருணை காவேரி
வளநாடாக்கும் தாயே நீ
வாழிய வாழிய பல்லாண்டு

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY