Solam Vethakaiyile
16 Vayathinile
Hero Kamalahasan
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers Gangai Amaran,Ilayaraja
Year 1977
Song Lyrics சோளம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு போன புள்ள
சோளம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு...

சொன்ன சொல்லு என்ன ஆச்சு
தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு
குங்கும பொட்டழகி (சோளம்)

மானே என் மல்லிகையே மருதை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே
உன்ன நெனக்கையிலே என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி (சோளம்)


மாரியம்மன் கோயிலிலே மாறாம கைபிடிக்க
நாளும் ஒண்ணு பாத்து வந்தேன் நல்லநேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்த அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி (சோளம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY