Parthavargal Mayangi Vizhum
Poomalai
Hero S.S.Rajendran
Music Director R.Sudharsanam
Lyricist V.Seetharaman
Singers L.R.Eswari
Year 1965
Song Lyrics

டீ......டீ......டீ........டீட்டீட்டீ.....
பியூட்டி........பியூட்டி......பியூட்டி....

பார்த்தவர்கள் மயங்கி விழும் பாரிஸ் நகர பியூட்டி
பாவையிவள் கணவருக்கு சமையல் அறையில் டியூட்டி
ராணியம்மா ராக்கட்டிலே சந்திரலோகம் போவாள்
தேனிலவை நிலவினிலே அனுபவித்து வருவாள் (பார்த்த)

காதல் குளிர் ஜூரம் உனக்கு
அதனால் கொஞ்சம் டிபக்ட் இருக்கு
தீராது மாறாது மேரேஜ் ஆகாமல்
இந்நோயும் தீராதடி

ஆகா இது பெரும் கன்ப்யூஷன்
அத்தான் அன்பே பிரிஸ்க்ரிப்ஷன்
ஓயாது குடும்பத்தில் தாயாகிப்
பிள்ளை பெறும் பேக்டரி ஆகாதடி (பார்த்த)

லீலா ஹலோ கமான் என்பார்
டார்லிங் நோ நோ ஊஹூம் என்பாள்
அவள் சொல்லச் சொல்ல கிட்ட வந்து மெல்ல மெல்ல
கிள்ளி கிள்ளி கன்னத்தில் ஒண்ணு தருவார்

மாமிக்கு அவுட்பாஸ் கொடுக்காதே
நாத்தியை நாக்கவுட் செய்யாதே
ஊர்ப் பெண்கள் கூட்டத்தை உன் வீட்டிலே கூட்டி
நியூஸ் பேப்பர் ஆகாதேடி...... (பார்த்த)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY