Pennai Veettil Poottiye
Pona Machaan Thirumbi Vandhan
Hero K.A. Thangavel
Music Director M.S.Viswanathan
Lyricist V.Seetharaman
Singers P.Leela,A.G.Rathnamala
Year 1954
Song Lyrics

பெண்ணை வீட்டில் பூட்டியே
விந்தை செய்த நாட்டிலே
இந்நாளிலே மாதரின் வாழ்விலே
இன்பம் காணுதே

அந்த நாளைப் போலே பெண்கள் இல்லாமலே
அறிவாலே மென்மை பெற்றோம் எல்லோருமே
ஆண்கள் போல நாமுமே ஆபீஸ் போகும் காலமே
அதிகாரம் திறமாக செய்யலாகுமே

ஹைகோர்ட்டு பாரீஸ்டர் ஆகணும் நீங்க
அதில்லாமப் போனாலோ
ஆஸ்பத்ரி டாக்டர் வேலைக்குப் போங்க
மன்றாடும் வேலைக்குத்தான் மதிப்பு ரொம்பதாங்க
பெண் டாக்டர்க்கும் சம்பாத்யம் ஏராளங்க

டாக்டர் வேலை லாயர் வேலை
ஏற்பது தொல்லைதானே
டப்பி மாத்திரை மாத்தித் தந்துட்டா
அப்பாவி பேஷண்ட் க்ளோஸ்
தப்பு சாக்ஷியால் கேஸு தோத்துட்டா
வக்கீலுக்கு இல்லை பீஸ்

ஏசிப் பேசுவர் தவறாது
இந்த வேலை ரெண்டும் உதவாது
எவ்விதமான தொழிலும்
பலவித துன்பம் உள்ளதுதானே...

எந்த வேலையும் இடைஞ்சல்தாங்க
எதுக்கும் வேணும் துணிச்சல்தாங்க
என்ன செய்ய உத்தேசங்க உங்க
எண்ணம் எதுவென்று சொல்லுங்க

சொல்லட்டுமா....
மாநில மேலே மாதர்கள் நாமே இன்பம் காணவே
வழியும் சொல்வேனே நானே சீராகவே
தொழிலை ஏற்கும் தொல்லை எல்லாம்
தருவோம் ஆண்களுக்கே

அறிவைக் கொண்டு ஆளவேண்டும்
ஆண்களை நாமே
பகுத்தறிவைக் கொண்டு ஆளவேண்டும்
ஆண்களை நாமே
வாழ்வினிலே பெண்களுக்கிதுவே சந்தோஷமே...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY