Kuduthidu Neeya Kuduthidu
Pona Machaan Thirumbi Vandhan
Hero K.A. Thangavel
Music Director M.S.Viswanathan
Lyricist V.Seetharaman
Singers A.G.Rathnamala,Chellamuthu
Year 1954
Song Lyrics

குடுத்திடு....நீயா குடுத்திடு....ஒழுங்கா
குடுத்திடு...நீ ஓடி ஓடி உலகத்தையே
சுத்தினாலும் விடவே மாட்டேன்
குடுத்திடு....நீயா குடுத்திடு....ஒழுங்கா..

மாட்டேனே தரவே மாட்டேனே
நீங்க எட்டுத் தரம் குட்டிகரணம்
போட்டுக் கெஞ்சி கேட்டாலும்
மாட்டேனே......தரவே மாட்டே....னே...

இது நிஜமா......பின்னே பொய்யா
தர மாட்டியா.......ஊஹூம்......

பொடியைக் கிணத்திலே போட்டே
எனது குடியைக் கெடுத்துப் போட்டே
பெட்ரோல் இல்லாத மோட்டாரைப் போலே
ப்ரேக் போட்டிடும் மூளையும் இனிமேல் (பொடி)

தண்ணி குழாயதைப் போலே
மூக்கு எந்நேரமும் இருந்தாலே
கண்டால் வெறுப்பார் மாதருங்க
நம்ம காதலுக்கும் அது டேஞ்சருங்க

இந்த பழக்கம் கெட்டதுங்க பொடி
பழக்கம் விட்டுடுங்கோ
போடும் வழக்கம் விட்டுடுங்கோ
நீ ரொம்ப கண்டே...அதோ பாருங்க உங்க மேல்துண்டை

ஆஹா சுர்ன்னு ஒரு தரம் உறிஞ்சிப்புட்டாக்கா
சுறுசுறுப்பெல்லாம் ஒடி வரும்
சோடி மலைகளை செண்டைப் போலே
ஆடி விளையாட ஊக்கம் தரும்

மானத்தை வில்லா வளைக்கணுமா ...இல்லை
மணலைக் கயிறா திரிக்கணுமா
கானத்தில் வாழும் புலியின் பாலை
கறந்து கொணாந்து குடுக்கணுமா
ஒரு சிட்டிகை இருந்தா போதும்

அய்யே....அதைச் சட்டுன்னு மறந்துடப்பாரும்
ஐயோ.........அஹச்சூ....

ஆசைக்கிளி இந்த ரத்தினமா இல்லை
நாசியில் போடும் சூரணமா
ஏது வேண்டும் அதைச் சொல்லிடுங்க
இந்த ரெண்டிலே ஒண்ணு தள்ளிடுங்க

எப்படி மறப்பேனடி பொடிதான் என்னுயிர் நாடியடி
செப்பிடு வித்தைபோல் மறக்க செப்பிடுவேன் வழியே
அது என்னவாம்.........நான் சொல்லவா.......ஓஹோ...
உலகத்தை மறந்திடலாம்...ஜோடி உன்போல் இருந்தாலே...
..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY